அனைத்து தரப்பினரையும் ஈர்க்கு ம் கத்ரிகுட்டே பூங்கா!
அனைத்து தரப்பினரையும் ஈர்க்கு ம் கத்ரிகுட்டே பூங்கா!
ADDED : ஆக 13, 2026 12:04 AM

- நமது நிருபர் -
வண்ண பூக்கள், வானுயர்ந்த மரங்கள், அமைதியான சூழ்நிலை உள்ள பூங்காக்கள் என்றால், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். மங்களூரில் அருமையான பூங்கா உள்ளது. இது, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது.
தட்சிண கன்னட மாவட்டம், மங்களூரு நகரில், கத்ரிகுட்டேவில் உள்ள பூங்கா பிரசித்தி பெற்றதாகும். மங்களூரின் மிகப்பெரிய பூங்காவாகும். மங்களூருக்கு வரும் சுற்றுலா பயணியர், இங்கு வந்து பொழுது போக்கி செல்கின்றனர். சிறார்களுக்கு மிகவும் பிடித்தமானது.
அமைதியான சூழ்நிலை உள்ளதால், காலை, மாலை நேரத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள், மூத்தகுடிமக்கள் அதிக எண்ணிக்கையில் நடைபயிற்சிக்கு வருகின்றனர்.
கத்ரிகுட்டே பூங்காவில் ஆண்டுதோறும் நடக்கும், கராவளி உற்சவம் மிகவும் பிரபலம். அவ்வப்போது மலர் கண் காட்சிகள் நடக்கும். இசை நீர் வீழ்ச்சியும் இங்குள்ளது. நுாற்றுக்கணக்கான ஏக்கரில் அமைந்துள்ள இந்த பூங்காவில், அபூர்வமான மரங்கள், பலவிதமான பூச்செடிகள், தாவரங்கள் உள்ளன.
நாள் முழுதும் பணி நெருக்கடி, குடும்பச்சுமையில் சிக்கி தவிக்கும் மக்கள், அமைதியான சூழ்நிலையில் பொழுது போக்க விரும்புவர். அவர்களுக்கு கத்ரிகுட்டே பூங்கா 'பெஸ்ட் சாய்ஸ்.'
சிறார்கள் விளையாட ஊஞ்சல், சறுக்கு வண்டிகள், மினி ஜிம் உட்பட, அனைத்தும் பூங்காவில் உள்ளன. மாலை நேரத்தில் குழந்தைகளுடன் இங்கு வந்து பொழுதுபோக்கும் பெற்றோரை காணலாம். பூங்காவுக்கு வந்தால் திரும்பி செல்லவே மனம் வராது.
பெங்களூரில் உள்ள லால்பாக் பூங்காவை போல, மங்களூரில் கத்ரிகுட்டே பூங்கா பெயர் பெற்றது. பசுமையான இயற்கை காட்சிகள், கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
மங்களூரின் பல்வேறு கடற் க ரைகளுக்கு வருவதை போல, இந்த பூங்காவுக்கும் சுற்றுலா பயணியர் விரும்பி வருகின்றனர். மணிக்கணக்கில் பொழுது போ க்கிவிட்டு செல்கின்றனர்.
மலை மீது இப்பூங்கா அமைந்திருப்பது, மற்றொரு சிறப்பாகும். இங்கு சில மணி நேரம் பொழுது போக்கினால், மன அழுத்தம் காணா மல் போகும்.
