UPDATED : ஆக 09, 2026 08:41 AM
ADDED : ஆக 08, 2026 03:10 PM

தளர்வான ஓவர்சைஸ் ஆடைகளே இன்றைய இளைஞர்களின் ரசனையில் டாப் இடத்தை பிடிக்கின்றன.
கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஐ.டி., இளைஞர்களின் தினசரி ஆடைத் தேர்வில் 'பேகி' பேஷன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இறுக்கமான ஜீன்ஸ் மாடல்களுக்கு விடை கொடுத்துள்ள இளைஞர்கள், அகலமான 'வைட் லெக் ஜீன்ஸ்' விரும்புகின்றனர். இது கிளாசிக் தோற்றத்துடன், தனித்துவமான ஸ்டைலையும் வழங்குகிறது.
அதிக பாக்கெட்டுகளுடன் காணப்படும் கார்கோ பேன்ட்ஸ், சவுகரியத்துடன் ஸ்டைலான தோற்றத்தையும் வழங்குவதால், ஸ்ட்ரீட் பேஷன் விரும்பும் இளைஞர்களின் 'டாப் சாய்ஸ்' ஆக உள்ளது.
பெரிய எழுத்துக்கள், கலை வடிவங்கள் அச்சிடப்பட்ட ஓவர்சைஸ் கிராபிக் டீ-ஷர்ட்களுக்கும் செம வரவேற்பு.
ஐ.டி., விதுஷா, “பார்ப்பதற்கு கூலாகவும், நாள் முழுவதும் அணிய வசதியாகவும் இருக்கிறது. 2 வருஷத்துக்கு முன்னாடி டிரஸ் கொஞ்சம் லூசா போட்டா, 'என்ன இவ்வளவு லூசாக போட்டிருக்கிறே' என கிண்டல் செய்வார்கள். ஆனால் அதுதான் இப்ப டிரெண்ட்,'' என்கிறார்.
