/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
1,275 சுற்றுலா தலங்கள் சுற்றுலா துறை அறிவிப்பு
/
1,275 சுற்றுலா தலங்கள் சுற்றுலா துறை அறிவிப்பு
ADDED : செப் 18, 2025 07:51 AM
பெங்களூரு,: கர்நாடகாவில் 1,275 சுற்றுலா தலங்கள் உள்ளதாக சுற்றுலா துறை அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலா துறை செயல்பட்டு வருகிறது. இதற்காக மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் வரலாறு, புகழ், பயணியர் வருகை உள்ளிட்ட தகவல்களை சேகரித்தது.
மாநிலத்தில் உள்ள 1,275 சுற்றுலா தலங்களை சுற்றுலா துறை பட்டியலிட்டுள்ளது. பெங்களூரு நகரில் 27, பெங்களூரு ரூரல் பகுதியில் 25 சுற்றுலா தலங்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக மாண்டியாவில் 106 சுற்றுலா தலங்கள் உள்ளன.
சுற்றுலா துறை அடையாளம் காணப்பட்ட, சுற்றுலா தலங்கள் அனைத்தும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பொலிவுடன் காட்சி அளிக்கும் என, சுற்றுலா துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பெங்களூரு நகரில் வெறும் 27 இடங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதற்கு, கண்டனம் எழுந்துள்ளது. பெங்களூரில் உள்ள ஒவ்வொரு தெருவிற்கும் வரலாற்று சிறப்புகள் உண்டு. அப்படி இருக்கையில் பெங்களூரில் வெறும் 27 இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது, கண்டனத்திற்குரியது என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.