வீட்டின் மேல் விழுந்த ஜீப் தப்பிய சுற்றுலா பயணியர்
வீட்டின் மேல் விழுந்த ஜீப் தப்பிய சுற்றுலா பயணியர்
ADDED : செப் 09, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
சிக்கமகளூரு: சிக்கமகளூரு நகரின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சந்திரதுரோண மலை தொடர்ச்சியின், ஜரி நீர் வீழ்ச்சி அருகில், கேரள சுற்றுலா பயணியர் இருந்த ஜீப், சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், 40 அடி உயரத்தில் இருந்து, கீழே இருந்த தொழிலாளர்கள் வீட்டின் மீது விழுந்தது.
விழுந்த வேகத்தில், ஜீப் நொறுங்கியது என்றாலும், அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணியர், முகம், கை, கால்களில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஜீப் விழுந்த வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால், அசம்பாவிதம் ஏற்படவில்லை.
விபத்தை பார்த்த அப்பகுதியினர், காயமடைந்த சுற்றுலா பயணியரை, மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து, சிக்கமகளூரு ஊரக போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
