தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு

 மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு

 மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு


ADDED : செப் 09, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: நகரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், 16 வயது மாணவரை தாக்கியதில் கண்ணுக்கு கீழ் ரத்தம் கட்டியிருந்தது. இதையடுத்து, அவர் மீது மாணவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

மைசூரு நகரின் லஷ்கர் பகுதியை சேர்ந்தவர் வாசிம் ஷெரிப். இவரின் மகன் ரேஹன் ஷெரிப், 16. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ரேஹன், கண்ணின் கீழ் பகுதியில் ரத்தம் கட்டியிருந்தது.

இது குறித்து பெற்றோர் கேட்டபோது, பெஞ்சில் இருந்து கீழே விழுந்ததில் அடிபட்டதாக தெரிவித்துள்ளார். காயத்துக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் காயத்தை பரிசோதித்தபோது, கீழே விழுந்ததால் காயம் ஏற்படவில்லை. யாரோ தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மகனிடம் மீண்டும் கேட்டபோது, அறிவியல் பாடம் எழுதாததால், அப்பாடத்தின் ஆசிரியர் சுரேஷ், தன்னை அடித்ததா க தெரிவித்தார். அத்துடன், இவ்விஷயத்தை வெளியே சொன்னால், வேறு பள்ளிக்கு மாற்று சான்றிதழ் தரமாட்டேன் என்று மிரட்டியதாக தெரிவித்தார்.

இதனால் கோபமடை ந்த மாணவனின் தந்தை வாசிப் ஷெரிப், லஷ்கர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us