/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அம்பாரி பஸ்களில் ' டாப்' பயணம் சுற்றுலா பயணியர் ஆர்வம்
/
அம்பாரி பஸ்களில் ' டாப்' பயணம் சுற்றுலா பயணியர் ஆர்வம்
அம்பாரி பஸ்களில் ' டாப்' பயணம் சுற்றுலா பயணியர் ஆர்வம்
அம்பாரி பஸ்களில் ' டாப்' பயணம் சுற்றுலா பயணியர் ஆர்வம்
ADDED : செப் 30, 2025 05:48 AM

த சராவுக்காக மைசூரு வந்துள்ள சுற்றுலா பயணியரின் வசதிக்காக, கே.எஸ்.டி.டி.சி., எனும் கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், 'அம்பாரி' என்ற பெயரில் டபுள் டெக்கர் பஸ்களை இயக்குகிறது.
இது குறித்து, கே.எஸ்.டி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
தசரா நிகழ்ச்சிகளை பார்க்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், சுற்றுலா பயணியர், மைசூருக்கு வந்துள்ளனர்.
இவர்கள் நகரை சுற்றிப்பார்க்க வசதியாக, ஐந்து டபுள் டெக்கர் அம்பாரி பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாலை நேரத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனையை பார்க்க, பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் மைசூரில் அக்டோபர், 21 வரை டபு ள் டெக்கர் பஸ்களின் போக்குவரத்து இருக்கும். இந்த பஸ்கள் 50 இருக்கை வசதி கொண்டுள்ளன.
கீழ்புறம் 30, மேற்புறத்தில் 20 இருக்கைகள் உள்ளன. கீ
ழ்புறம் இருக்கைக்கு தலா 250 ரூபாய், மேற்புற இருக்கையில் பயணிக்க 500 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஸ்சில் ஒரு மணி நேரம், மைசூரை சுற்றிப்பார்க்கலாம்.
தினமும் மாலை 6:30, இரவு 8:00 மற்றும் 9:30 மணி என, மூன்று டிரிப்புகளில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. விஜயதசமி நாளன்று, அம்பாரி பஸ் சேவை இருக்காது.
இந்த பஸ்களில் பயணிக்க, சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே அக்டோபர் 10 வரை ஐந்து பஸ்களின் மேற்புற இருக்கைகள், முழுவதுமாக முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. கீழ்ப்புறத்திலும் 75 சதவீதம் இருக்கைகள் முன் பதிவாகியுள்ளன. மேற்புறத்தில் பயணிக்க பலரும் விரும்புகின்றனர். அனைத்து இருக்கைகளும், முன் பதிவானதால் ஏமாற்றம் அடைகின்றனர்.
அம்பாரி பஸ்களில், இருக்கை முன் பதிவு செய்தவர்களில் பெங்களூரு, கேரளா மற்றும் தமிழகத்தினர் அதிகம். எங்களிடம் ஆறு அம்பாரி பஸ்கள் உள்ளன. இதில், ஒரு பஸ்சை தசரா உற்சவத்துக்காக துமகூருக்கு அனுப்பியுள்ளோம்.