தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளத்தில் பாய்ந்த டிராக்டர் ஆந்திர தொழிலாளி உயிரிழப்பு

 பள்ளத்தில் பாய்ந்த டிராக்டர் ஆந்திர தொழிலாளி உயிரிழப்பு

 பள்ளத்தில் பாய்ந்த டிராக்டர் ஆந்திர தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஜூலை 03, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 10:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: கல்குவாரியின், 30 அடி ஆழ பள்ளத்தில் டிராக்டர் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

ஆந்திரா மாநிலம் தர்மாவரத்தை சேர்ந்தவர் நாகேந்திரா, 35. இவர், கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் யலகலஹள்ளி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்தார்.

நேற்று முன்தினம் மாலை, கல்குவாரி பாறைகளை உடைக்க, கம்ப்ரசர் டிராக்டரில் அமர்ந்தபடி இயக்கினார். அப்போது, 30 அடி ஆழ பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது.

தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நாகேந்திராவை, சக தொழிலாளர்கள் மீட்டு, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.

நாகேந்திரா வேலை செய்த கல்குவாரி, சட்டவிரோதமாக இயங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரேசந்திரா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us