/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின்சார அடுப்பு விற்பனை அதிகரிப்பு வியாபாரிகள் குஷி
/
மின்சார அடுப்பு விற்பனை அதிகரிப்பு வியாபாரிகள் குஷி
மின்சார அடுப்பு விற்பனை அதிகரிப்பு வியாபாரிகள் குஷி
மின்சார அடுப்பு விற்பனை அதிகரிப்பு வியாபாரிகள் குஷி
ADDED : மார் 13, 2026 06:12 AM

பெங்களூரு: காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பலரும், 'இண்டக்ஷன் ஸ்டவ்' எனப்படும், மின்சார அடுப்பை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். கடைகளில் இந்த ரக ஸ்டவ் விற்பனையும் அதிகரித்துள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் இருப்பதால், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எல்.பி.ஜி., காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், உணவக உரிமையாளர்கள் பலரும், இண்டக்ஷன் ஸ்டவ் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பெங்களூரின் அனைத்து இடங்களிலும், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில், இண்டக்ஷன் ஸ்டவ்களுக்கு தேவை் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில், பெங்களூரின் பெரும்பாலான கடைகளில், இண்டக்ஷன் ஸ்டவ்களின் ஸ்டாக் காலியாகி விட்டது. குறிப்பாக ஜெயநகர், மல்லேஸ்வரம், சிக்பேட், கோரமங்களா உட்பட, முக்கியமான வர்த்தக பகுதிகளில் இத்தகைய ஸ்டவ்களுக் கு தேவை அதிகரித்துள்ளது.
ஜெயநகரின் கடை ஒன்றில், ஒரே நாளில் 350, மற்றொரு கடையில், 75 ஸ்டவ்கள் விற்பனையாகியுள்ளன. மல்லேஸ்வரத்தில் உள்ள பல கடைகளில், ஸ்டாக் காலியாகி விட்டது. சிக்பேட்டிலும் இதே நிலைமை தான்.
வர்த்தக கடைகளில் மட்டுமல்ல, ஆன்லைன் வழியாக, இண்டக்ஷன் ஸ்டவ் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஜெப்டோ, ஸ்விக்கி என, மற்ற ஆன்லைன் வர்த்தக மையங்களில், ஸ்டவ் ஆர்டர் செய்து வாங்குகின்றனர். அமேசான் ஆன்லைன் தளத்தில் 2 நாட்களில் இண்டக்ஷன் ஸ்டவ்களின் விற்பனை, 30 சதவீதம் அதிகரித்துள்ளது .
எலக்ட்ரிக் பிரஷர் குக்கர் விற்பனை, நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக, அந்நிறுவன பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

