சுரங்க பாதையில் சிக்கிய லாரி போக்குவரத்து கடும் பாதிப்பு
சுரங்க பாதையில் சிக்கிய லாரி போக்குவரத்து கடும் பாதிப்பு
ADDED : செப் 10, 2026 11:02 PM
பெங்களூரு: சுரங்கப்பாதையில் பெரிய சரக்கு லாரி சிக்கி கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூரின், ராஜ்குமார் சாலையின் சுரங்கப்பாதையில், நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, பெரிய லாரி ஒன்று சரக்குகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது சுரங்கப்பாதையில் இருந்த வளைவில் டிரக் சிக்கிக்கொண்டது. முன்னேயும் எடுக்க முடியவில்லை.
பின்னாலும் எடுக்க முடியவில்லை. இதனால் பீதியடைந்த ஓட்டுநர், லாரியில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டார். சுரங்கப்பாதையில் சிக்கியதால், சரக்குகளின் அழுத்தம் தாங்காமல், லாரியின் அனைத்து டயர்களும் வெடித்துள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது. வாகனங்கள் செல்ல வழியின்றி வரிசையாக நின்றிருந்தன. தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார், வாகன போக்குவரத்தை மாற்றினர்.
சுரங்கப்பாதையில் சிக்கிய சரக்கு லாரியை, நீண்ட நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர். நேற்று முன் தினம், மஹாராணி கல்லுாரி அருகில் உள்ள சுரங்க பாதையில், லாரி ஒன்று சிக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
