நந்தி மலையில் மாரத்தான் போட்டி போக்குவரத்துக்கு தடை விதிப்பு
நந்தி மலையில் மாரத்தான் போட்டி போக்குவரத்துக்கு தடை விதிப்பு
ADDED : ஆக 08, 2026 07:02 AM
சிக்கபல்லாபூர்: நந்தி மலையில் மழைக்கால 'மாரத்தான்' எனும் நீண்ட துார ஓட்டப்பந்தயம் நடப்பதால், நந்தி மலை சாலையில் வாகன போக்குவரத்துக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, சிக்கபல்லாபூர் மாவட்ட கலெக்டர் பிரபு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியதாவது :
நந்தி மலையில் ஆகஸ்ட் 9ம் தேதியன்று, மழைக்கால மாரத்தான் நிகழ்ச்சி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, காரஹள்ளி கிராசில் இருந்து, நந்தி மலை வரையிலான சாலையில், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை - இன்று இரவு 11:00 மணி முதல், மறுநாள் 9ம் தேதி மதியம் 12:00 மணி வரை, தடையுத்தரவு அமலில் இருக்கும்.
நந்தி மலை மழைக்கால மாரத்தானில், 10 கி.மீ., மற்றும் 21 கி.மீ., பிரிவுகளில் போட்டிகள் நடக்கும்.
இதில், 4, 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கிறோம். மாரத்தானை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.
து ணை முதல்வர் பரமேஸ்வர், மாரத்தானை துவக்கி வைப்பார். மாரத்தானில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் வாகனங்களுக்கு, பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதி இருக்கும். மாரத்தான் நடப்பதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுகளை, சுற்றுலா பயணியர் பின்பற்றுவது கட்டாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
