sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஐ.பி.எல்., போட்டி நடப்பதால் வாகன போக்குவரத்து மாற்றம்

/

 ஐ.பி.எல்., போட்டி நடப்பதால் வாகன போக்குவரத்து மாற்றம்

 ஐ.பி.எல்., போட்டி நடப்பதால் வாகன போக்குவரத்து மாற்றம்

 ஐ.பி.எல்., போட்டி நடப்பதால் வாகன போக்குவரத்து மாற்றம்


ADDED : ஏப் 24, 2026 04:21 AM

Google News

ADDED : ஏப் 24, 2026 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி விளையாட்டு அரங்கத்தில், இன்று ஆர்.சி.பி., மற்றும் ஜி.டி., அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல்., போட்டி நடப்பதால், விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப்பகுதியில் வாகன போக்குவரத்தில், மாற்றம் செய்யப்ட்டுள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு சின்னச்சாமி விளையாட்டு அரங்கில் இன்று ஆர்.சி.பி., மற்றும் ஜி.டி., அணிகளுக்கு இடையேயான, ஐ.பி.எல்., போட்டி நடக்கவுள்ளது. இதைக்காண ஆயிரக்கணக்கான மக்கள், விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தருவர். வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, வாகன போக்குவரத்தில் மாற்றம் செயப்பட்டுள்ளது.

குயின்ஸ் சாலையின், பாளேகுந்த்ரி சதுக்கத்தில் இருந்து, சி.டி.ஒ., ஜங்ஷன் வரை, எம்.ஜி.சாலையின் அனில்கும்ளே சதுக்கத்தில் இருந்து குயின்ஸ் சதுக்கம் வரை, சாலையின் இரண்டு ஓரங்களிலும் வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது. லிங்க் சாலை, ராஜ்பவன் சாலை, சவுடய்யா சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, சென்ட்ரல் ஸ்ட்ரீன் சாலையிலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

கப்பன் சாலையின், சி.டி.ஓ., சதுக்கத்தில் இருந்து, டிக்கென்ஷன் சாலை ஜங்ஷன் வரை, காமராஜர் சாலை ஜங்ஷனில் இருந்து, டிக்கென்ஷன் வரை, பி.எம்.டி.சி., பஸ்களை தவிர, மற்ற வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் மார்க்ஸ் சாலை, மியூசியம் சாலை, கஸ்துாரி பா சாலை, மல்லையா மருத்துவமனை சாலை, லேவல்லி சாலை, விட்டல் மல்லையா சாலைகளிலும், இந்த உத்தரவு பொருந்தும். கப்பன் பூங்கா உட்புறத்தின், கிங் சாலை, பிரஸ் கிளப், பாலபவன், பவுன்டென் சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

விளையாட்டு போட்டியை காண வரும் பொது மக்களின் வசதிக்காக, விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப்பகுதிகளின் பல்வேறு இடங்களில் வாகனத்தை நிறுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. சித்த லிங்கையா சதுக்கம் அருகேயுள்ள, செயின்ட் ஜோசப் இந்தியன் ஹைஸ்கூல் மைதானம், மியூசியம் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் யுரோப்பியன் ஸ்கூல் மைதானத்தில், தங்களின் வாகனத்தை நிறுத்தலாம்.

சுதந்திர பூங்காவின் பலமாடி பார்க்கிங் கட்டடம், கருடா மால், யு.பி.சி.டி., மற்றும் கண்டீரவா விளையாட்டு அரங்க வளாகம், சிவாஜி நகர் பஸ் நிலையத்தின் முதல் மாடியில் வாகனத்தை நிறுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us