ADDED : மே 27, 2026 06:42 AM
பெங்களூரு: பக்ரீத் பண்டிகையன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதை தடுக்க, நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:
நாகவாரா சந்திப்பில் இருந்து சிவாஜிநகர் செல்வதற்கு, ஹென்னுார் சாலையிலிருந்து ஹெச்.பி.ஆர்., 80 அடி சாலை வழியாக செல்லவும். அங்கிருந்து சந்திரிகா சந்திப்பு, லிங்கராஜபுரம் மேம்பாலம், புலிகேசிநகர், ராபர்ட்சன்சாலை, ஹெய்ன்ஸ் சாலையில் பயணித்து சிவாஜிநகரை அடையலாம்.
அதுபோல, சிவாஜிநகரிலிருந்து நாகவாரா சந்திப்பு செல்ல, கோல்ஸ் சாலையிலிருந்து வீரசந்திரா சாலை வழியாக ஹென்னுார், பானஸ்வாடி, நாகவாரா சந்திப்பை சென்றடையலாம்.
நாகவாரா சந்திப்பில் இருந்து போட்டரி சதுக்கம்; பழைய உதயா டிவி சந்திப்பிலிருந்து மில்லர்ஸ் சாலை, செயின்ட் ஜான்ஸ் சாலையில் இருந்து சர்ச் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு தற்காலிக தடை.
ஹெய்ன்ஸ் சாலையிலிருந்து செயின்ட் ஜான்ஸ் சர்ச் சாலை, மில்லர்ஸ் சாலை, நந்திதுர்கா சாலை; நந்திதுர்கா சாலையிலிருந்து மில்லர்ஸ் சாலை, செயின்ட் ஜான்ஸ் சர்ச் சாலை நோக்கிச் செல்ல வாகனங்களுக்கு தற்காலிக தடை.
அல்போன்சஸ் பள்ளி, பில்லண்ணா கார்டன், உமர் மசூதி 4வது கிராஸ் சாலை, ஹெச்.ஆர்.பி., 9வது கிராஸ் சாலை, ஹெச்.ஆர்.பி., 80 அடி சாலையின் 1வது கிராஸ் ரோடு ஆகிய இடங்களில் தொழுகையில் பங்கேற்போர் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். மில்லர்ஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது .
இந்த போக்குவரத்து மாற்றம் நாளை அதிகாலை, 5:00 மணி முதல், பகல் 2:00 மணி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
