தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போக்குவரத்து விதிமீறல் வழக்கு: ஒரே வாரத்தில் ரூ.5.98 கோடி வசூல்

 போக்குவரத்து விதிமீறல் வழக்கு: ஒரே வாரத்தில் ரூ.5.98 கோடி வசூல்

 போக்குவரத்து விதிமீறல் வழக்கு: ஒரே வாரத்தில் ரூ.5.98 கோடி வசூல்


ADDED : நவ 29, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையை பலரும் பயன்படுத்திக்கொண்டனர். ஒரே வாரத்தில் 6 கோடி ரூபாய் அபராதம் வசூலாகியுள்ளது.

கர்நாடகாவில் சாலைப் போக்குவரத்து விதிமீறல்கள் வழக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அபராதம் செலுத்தாமல், லட்சக்கணக்கான வாகன உரிமையாளர்கள், அலட்சியம் காண்பித்தனர். இதை வசூலிக்க முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறினர். பாக்கி வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

எனவே கடந்தாண்டு, போக்குவரத்து போலீசார், மாநில அரசிடம் அனுமதி பெற்று, போக்குவரத்து விதிமீறலுக்கு செலுத்தும் அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகை அளித்தனர். வாகன உரிமையாளர்கள், தாமாக முன் வந்து அபராதம் செலுத்தினர். போக்குவரத்து போலீஸ் துறையில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் வசூலானது.

மீண்டும் தள்ளுபடி சலுகை அளிக்கும்படி, மாநில அரசிடம் போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். அரசும் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி நவம்பர் 21 முதல் டிசம்பர் 12 வரை 50 சதவீதம் தள்ளுபடி சலுகையுடன், அபராதம் செலுத்த அனுமதி அளித்தது. வாகன உரிமையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்தி, அபராதம் செலுத்துகின்றனர்.

மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 5 கோடியே 98 லட்சத்து 28,800 ரூபாய் அபராதம் வசூலானது. 2,25,511 வழக்குகள் முடிவுக்கு வந்தன. டிசம்பர் 12ம் தேதி வரை அவகாசம் உள்ளதால், அபராத தொகை வசூல் மேலும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us