தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ராஜனுகுண்டே ஸ்டேஷனில் ரயில் பெட்டிகள் எரிந்து சேதம்

ராஜனுகுண்டே ஸ்டேஷனில் ரயில் பெட்டிகள் எரிந்து சேதம்

ராஜனுகுண்டே ஸ்டேஷனில் ரயில் பெட்டிகள் எரிந்து சேதம்


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜனுகுண்டே: ராஜனுகுண்டே ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில், ரயில் பெட்டி எரிந்து சேதம் அடைந்துள்ளது.

பெங்களூரு - தர்மாவரம் ரயில்வே வழித்தடத்தில், எலஹங்கா - தொட்டபல்லாபூர் ரயில் நிலையங்களுக்கு இடையில், ராஜனுகுண்டே ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து, 500 மீ., துாரத்தில், பயன்பாட்டில் இல்லாத நான்கு ரயில் பெட்டிகள், 'லுாப் லைன்' எனும் மாற்று பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று காலை, ஒரு ரயில் பெட்டியில் பிடித்த தீ, மளமளவென வேகமாக பரவி, இன்னொரு பெட்டி மீதும் பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்த ரயில்வே ஊழியர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்த படையினர், ரயில் பெட்டிகள் மீது பிடித்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும், ஒரு பெட்டி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மற்ற மூன்று பெட்டிகளும் கழற்றி விடப்பட்டு, இழுத்து செல்லப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், பேரிடர் மீட்பு பணி ஒத்திகை பணிகளுக்காக இந்த ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இந்த தீ விபத்துக்கு, மின்கசிவு காரணமா அல்லது மர்மநபர்கள் கைவரிசையா என, எலஹங்கா ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us