பிச்சையெடுத்த 13 சிறார் மீட்பு காரணமான நால்வருக்கு ‘காப்ப ு ’
பிச்சையெடுத்த 13 சிறார் மீட்பு காரணமான நால்வருக்கு ‘காப்ப ு ’
UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 08:24 PM
எலஹங்கா: பண ஆசையால் சிறுவர்களை பிச்சையெடுக்க வைத்த நால்வர் கைது செய்யப்பட்டனர். 13 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
பெங்களூரு, எலஹங்காவின், கோகிலு கிராஸ் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில், வெளி மாநிலத்தினர் சிலர் குடிசை அமைத்து தங்கியுள்ளனர்.
இவர்கள், பலவந்தமாக சிறுவர்களைப் பிச்சையெடுக்க வைப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, போலீசார், சமூக நலத்துறை அதிகாரிகள், நேற்று அதிகாலை சோதனை செய்தனர்.
அப்போது, சிறுவர்களை பொது இடங்கள், போக்குவரத்து சிக்னல்களில் பிச்சையெடுக்க வைத்தது தெரிந்தது.
தொடர் விசாரணையில், அங்கிருந்த நால்வர், தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 13 சிறுவர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலன் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
