/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு பெங்களூரில் இருந்து ரயில் சேவை
/
குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு பெங்களூரில் இருந்து ரயில் சேவை
குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு பெங்களூரில் இருந்து ரயில் சேவை
குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு பெங்களூரில் இருந்து ரயில் சேவை
ADDED : ஏப் 10, 2025 05:11 AM

துமகூரு: பெங்களூரில் இருந்து குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு வரும் 12ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறி உள்ளார்.
துமகூரில் நேற்று நடந்த ரயில்வே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா அளித்த பேட்டி:
பெங்களூரில் இருந்து தட்சிண கன்னடாவில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு, வரும் 12ம் தேதி முதல் ரயில் சேவை துவங்க உள்ளது. இந்த ரயில் ஒரு நாளைக்கு நான்கு முறை சென்று வரும்.
வரும் 11ம் தேதி ஹாவேரியில் இருந்து பெங்களூருக்கு 'வந்தே பாரத்' ரயில் இயங்க உள்ளது.
அடுத்த 15 நாட்களில் கதக், வாடி, குஷ்டகி, யெலபர்கா ஆகிய பகுதிகளில் ரயில் சேவைகள் துவங்கப்படும். மக்கள் பயன் பெறும் வகையில் ரயில்வே துறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் ரயில்வே துறை மேம்பாட்டுக்காக 33 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 23 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் 10 திட்டங்கள் ஏற்கனவே துவங்கப்பட்டு உள்ளன.
காங்., - எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரா, துமகூரு சிராவில் விமான நிலையம் அமைக்குமாறு 34 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட மனுவை என்னிடம் கொடுத்தார்.
அதை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் சமர்ப்பித்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

