ADDED : மார் 28, 2026 04:18 AM

நிர்வாகம் சென்ட்ரல் மாநகராட்சியில் தற்போது 1,164 அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் உள்ளனர். 2,621 நிரந்தர துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இதில், 843 பேர் நேரடி ஊதிய பட்டியலில் உள்ளனர். மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கின்றனர். நிர்வாக அமைப்பை சீரமைக்கும் வகையில், தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் சேர்க்கப்படுவர்.
மாநகராட்சியின் வருவாயை பெருக்க, சொத்து வரி வசூலிப்பதே ஒரே தீர்வு. மாநகராட்சியின் வருவாய் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு, சொத்துக்களை ஜி.பி.எஸ்., முறையில் சர்வே எடுக்க பயிற்சி அளிக்கப்படும். தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.
நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவும், அலுவலக பணிகளை விரைந்து முடிக்கவும், காகிதமில்லா நடைமுறையை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
