sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பணம் வசூலிப்பில் பிரச்னை திருநங்கை குழுக்கள் சண்டை

 பணம் வசூலிப்பில் பிரச்னை திருநங்கை குழுக்கள் சண்டை

 பணம் வசூலிப்பில் பிரச்னை திருநங்கை குழுக்கள் சண்டை


ADDED : நவ 30, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: பணம் வசூலிப்பதில் ஏற்பட்ட பிரச்னையால், இரு திருநங்கை குழுக்கள் கோவில் வீதியில் கையில் கிடைத்த பொருட்களை வைத்து கொடூரமாக தாக்கிக் கொண்டனர்.

மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் ஆரத்தி உக்கட அஹல்யாதேவி மாரம்மா கோவில் உள்ளது. கோவில் வீதியில் உள்ள கடைகளில் மைசூரு மற்றும் மாண்டியாவை சேர்ந்த இரு திருநங்கையர் குழுவினரும் பணம் வசூலித்து வந்தனர். இங்கு யார் பணம் வசூலிப்பது என்பதில் இரு குழுவினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது.

நேற்று காலையில் கோவில் வீதியில் உள்ள கடைகளில் பணம் வசூலிக்க இரண்டு குழுவினரும் ஒரே நேரத்தில் வந்தனர். அப்போது, யார் பணம் வசூலிப்பது என்பதில் வாய் தகராறு ஏற்பட்டது. இது அடிதடியாக மாறியது. இரு குழுவினரும் குச்சி, கற்கள் என கையில் கிடைத்ததை வைத்து பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர்.

ஆடைகளை கிழித்து, தலை முடியை பிடித்து இழுத்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். கோவில் வீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்தவர்கள் சிலர் சண்டையை தடுக்க முயன்றனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்த வீடியோவை அங்கிருந்த நபர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூகவலைதளங்களில் வெளியிட்டார். ஸ்ரீரங்கப்பட்டணா ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us