/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒய்யார நடையில் கலக்கிய திருநங்கையர்
/
ஒய்யார நடையில் கலக்கிய திருநங்கையர்
ADDED : செப் 27, 2025 04:56 AM

மைசூரு மகளிர் தசராவின் கடைசி நாளான நேற்று, திருநங்கையருக்கு 'ராம்ப் வாக்' நடந்தது. ஒய்யாரமாக நடந்து வந்து கலக்கி, பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தனர்.
மைசூரு தசராவையொட்டி, ரயில் நிலையம் அருகே உள்ள ஜே.கே.மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்த, மகளிர் தசரா நேற்று நிறைவு பெற்றது. பெண்களுக்கான 'ராம்ப் வாக்' நடந்தது. இதில் திருநங்கையரும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒய்யாரமாக மேடையில் நடந்து வந்து கலக்கினர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர் தர்ஷன் அபியான் இயக்கிய தர்மா படத்தின், 'காவ்யா ஷெட்டியா உனிசு தனவனதேகே' பாடலுக்கு, திருநங்கை பவானி நடனமாடினார்.
அங்கு நடந்த கலாசார நிகழ்ச்சியில், கொடவா சமூக பெண்கள், தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, குடகின் கலாசாரத்தை நடனமாடி வெளிப்படுத்தினர்.