தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மெட்ரோவில் பயணிப்பது நாடகம் பா.ஜ.,வினர் மீது பிரியங்க் பாய்ச்சல்

 மெட்ரோவில் பயணிப்பது நாடகம் பா.ஜ.,வினர் மீது பிரியங்க் பாய்ச்சல்

 மெட்ரோவில் பயணிப்பது நாடகம் பா.ஜ.,வினர் மீது பிரியங்க் பாய்ச்சல்


ADDED : மே 17, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சமீப நாட்களாக பா.ஜ., தலைவர்கள், மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். இது அவர்களின் ஒரு நாள் நாடகம், என, கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பா.ஜ., தலைவர்கள் தினமும் மெட்ரோ ரயிலில் பயணித்தால், நான் வரவேற்கிறேன். ஆனால், அவர்கள் மெட்ரோ ரயிலில் பயணிப்பது, ஒருநாள் நாடகமாகும். ஒருவர் மெட்ரோவில் பயணிப்பது, மற்றொருவர் பைக்கில் ஏறி, போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும், பா.ஜ.,வின் பழைய பழக்கம்.

பா.ஜ.,வினருக்கு மக்கள் மீது, அக்கறை இருந்தால், அவர்கள் தினமும் பி.எம்.டி.சி., பஸ்சில் பயணிக்கட்டும். காங்கிரஸ் அரசின் சக்தி திட்டத்தை, பா.ஜ., பெண் தலைவர்களும் பயன்படுத்தட்டும்.

மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை, மெட்ரோ ரயிலில் ஏறும்படி செய்தது யார்.

அவருக்கு இந்த சூழ்நிலை ஏன் வந்தது. எரிபொருள் விலை உயர்வே, இதற்கு காரணம். இதற்கு பா.ஜ., தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி, தமது நிர்வாகம் தோல்வியடையும் நேரத்தில், மக்களின் தியாகத்தை விரும்புவார். இதற்கு 'பொற்காலம்' என, பெயர் சூட்டியுள்ளார். தங்கத்தை ஒதுக்குவது நல்ல நாள், வாழ்க்கையை தொலைப்பது பொற்காலம். இது மோடியின் மேஜிக்.

கொரோனா நேரத்தில், கை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என, கூறியபடியே லட்சக்கணக்கான மக்களை பரிதவிக்க விட்டனர். ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்ட நேரத்தில், 50 நாட்கள் கால அவகாசம் தாருங்கள்.

சரி செய்யாவிட்டால் நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க தயார் என்றார். இப்போது தங்கம் வாங்காதீர்கள். எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என, உபதேசம் செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us