தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்., சென்ட்ரல் மாநகராட்சியில் மரக்கிளை அகற்றும் பணி துரிதம் 

 பெங்., சென்ட்ரல் மாநகராட்சியில் மரக்கிளை அகற்றும் பணி துரிதம் 

 பெங்., சென்ட்ரல் மாநகராட்சியில் மரக்கிளை அகற்றும் பணி துரிதம் 


ADDED : மே 24, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சியில் மரக்கிளைகள் அகற்றும் பணி துரிதமாக நடப்பதாக, கமிஷனர் ராஜேந்திர சோழன் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:

மழை, பலத்த காற்றின் தாக்கத்தால், மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயம் இருப்பதால், சென்ட்ரல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கிளைகளை அகற்றும் பணி துரிதமாக நடக்கிறது.

திறமையான குழுவினர் உதவியுடன் கிரேன், உபகரணங்கள் மூலம் அவை அகற்றப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 29ம் தேதி வரை சென்ட்ரல் மாநகராட்சி பகுதிகளில், 260 மரங்கள் மற்றும், 761 மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து உள்ளன. அனைத்தையும் அகற்றி விட்டோம். பொது மக்கள் பாதுகாப்பே எங்கள் முக்கியம்.

பெரும்பாலான இடங்களில் மரக்கிளைகள் அகற்றும் பணி நிறைவு பெற்று உள்ளது. இன்னும் சில இடங்களில் பாக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us