ADDED : ஜூலை 27, 2025 05:07 AM
சிக்கமகளூரு முடிகெரே தாலுகா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பித்ருதலா என்ற வனப்பகுதியில் நேற்று தடையை மீறி மலையேற்றத்தில் ஈடுபட்ட பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்யும் 103 பேரை பாலுார், பனகல் போலீசார் கைது செய்தனர். இரண்டு பஸ்கள், இரண்டு பிக் அப் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வீடு புகுந்து கொள்ளை
சீனிவாசப்பூர் வெங்கடேஷ்புரா பகுதியில் உள்ள டி.வி.ஜே., சாலையில் வசித்து வருபவர், பி.எல்.டி., வங்கி தலைவர் திம்பள்ளி அசோக். இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதை அறிந்த மர்ம கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது. வீட்டில் இருந்த 467 கிராம் தங்க நகைகள், 620 கிராம் வெள்ளி பொருட்கள் திருடிச் சென்றனர்.
வழிப்பறி 5 பேர் கைது
தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கோகுல், 32, வல்லரசு, 35, ஆகிய இருவர் பணம் வசூலித்து, கோலாரில் இருந்து சிந்தாமணிக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்களை எட்டு பேர் கும்பல் வழிமறித்து, அவர்கள் கையில் வைத்து இருந்த 16 ஆயிரம் ரூபாய், ஜிபேயில் அக்கவுண்டில் இருந்த 40 ஆயிரம் ரூபாய், இரு மொபைல் போன்கள் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். பெங்களூரு ஆவலஹள்ளி ஷேக் பர்வேஸ், 32, தன்வீர், 30, சுல்தான், 24, மைசூரின் ஜமுர்பாஷா, 24, சையத் உம்மர் முக்தார், 35, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை
தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர் எஸ்.எம்.மூர்த்தி, 53. வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்துமாறு தொடர்ந்து நெருக்கடி வந்ததால், தனது வீட்டில் துாக்கிட்டு எஸ்.எம். மூர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.

