UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 09:32 PM
பெங்களூரு: பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் தயானந்த நகரில் உள்ள சங்க அலுவலகத்தில், வரும் 25ம் தேதி காலை 10:30 மணிக்கு, ‘நோபல்’ பரிசு பெற்ற சர் சி.வி.ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நவநீதம் பிள்ளை ஆகிய தமிழர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
சங்க தலைவர் எஸ்.டி.குமார் தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக டாக்டர் நாகசுப்பிரமணியன் அழகிரிசாமி பங்கேற்கிறார். திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் ஈ.வெ.ரா., கருணாநிதி விழா நடக்கிறது. ஜெயவேலு, சுப்பிரமணி, லட்சுமணன் ஆகியோர் திருக்குறள் வழங்குகின்றனர். ராமசாமி, போர் முரசு கதிரவன், சற்குணம், மலர்வேணி, ஜானகிராமன், குணவேந்தன், முல்லை கோ.தமிழடியான் பேசுகின்றனர்.
பாட்டரங்கத்திற்கு, ராம இளங்கோவன் தலைமை வகிக்கிறார். ஈ.வெ.ரா., குறித்து பாவலர்கள் ராமகிருஷ்ணன், வீணைதேவி, கல்யாணகுமார், வித்யா, தேன்மொழியான்; கருணாநிதி குறித்து பாவலர்கள் வேளாங்கண்ணி, சேகர், நம்பிராஜன், ஏவியார், தேன்மொழி ஆகியோர் பேசுகின்றனர்.
சங்க செயலர் பிரபாகரன் நன்றி கூறுகிறார்.
