/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் சித்தராமையாவை விமர்சித்த 'பேஸ்புக்' எழுத்தாளருக்கு சிக்கல்
/
முதல்வர் சித்தராமையாவை விமர்சித்த 'பேஸ்புக்' எழுத்தாளருக்கு சிக்கல்
முதல்வர் சித்தராமையாவை விமர்சித்த 'பேஸ்புக்' எழுத்தாளருக்கு சிக்கல்
முதல்வர் சித்தராமையாவை விமர்சித்த 'பேஸ்புக்' எழுத்தாளருக்கு சிக்கல்
ADDED : ஜூலை 27, 2025 05:05 AM
பெங்களூரு:பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், தர்மஸ்தலாவில் உள்ள புகழ்பெற்ற கோவில், அந்த கோவிலின் நிர்வாக அதிகாரி, அவரது குடும்பத்தினரை பற்றி செய்தி வெளியிட ஊடகங்களுக்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே கோவில், நிர்வாக அதிகாரி, அவரது குடும்பத்தினருக்கு எதிரான 8,842 சமூக வலைதள பதிவுகளை அழிக்கவும், நீதிபதி விஜய்குமார் ராய் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் எதிரொலியாக தர்மஸ்தலா வழக்கு, கோவில், நிர்வாக அதிகாரி பற்றி யாராவது அவதுாறு வெளியிடுகின்றனரா என்பதை, சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பெங்களூரு கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, சைபர் கிரைம் பிரிவில் எஸ்.ஐ., யாக பணியாற்றும் குபேரா, கடந்த 21ம் தேதி பணியில் இருந்தபோது, 'ட்ரு செக்குலர்' என்ற முகநுால் பக்கத்தில் கன்னடத்தில் முதல்வர் பற்றி அவதுாறாக பதிவிடப்பட்டிருப்பதை கவனித்தார்.
அந்த பதிவில், 'முதல்வர் சித்தராமையா தன் பதவிக் காலங்களில் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கிறார். தன் முதல் பதவிக் காலத்தில் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா மடத்திற்கு எதிராக செயல்பட்டார். லிங்காயத் சமூகத்தை இரண்டாக உடைக்க முயன்றார். தற்போது தர்மஸ்தலாவை குறிவைத்துள்ளார்' என கூறப்பட்டு இருந்தது.
இந்த பதிவுக்கு 25 'லைக்'குகள் கிடைத்தன. ஐந்து பேர் ஆதரவாக கருத்து பதிவிட்டு இருந்தனர். அதில் சில கருத்துகள் முதல்வரின் தலைமையை அவமதிக்கும் வகையில் இருக்கின்றன.
முகநுாலில் பதிவிட்டவர், கருத்து தெரிவித்த 5 பேர் மீது தாமாக முன்வந்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.