/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இன்று இரவு முதல் லாரிகள் ஸ்டிரைக்
/
இன்று இரவு முதல் லாரிகள் ஸ்டிரைக்
ADDED : ஏப் 14, 2025 06:20 AM

பெங்களூரு : டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கவுள்ளது.
கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
டீசல் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து, நாங்கள் ஏற்கனவே போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நாளை (இன்று) நள்ளிரவில் இருந்து, வேலை நிறுத்த போராட்டம் துவங்கும்.
கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களின் லாரி உரிமையாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர். பெட்ரோல் பங்க் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, போராட்டத்தை நிறுத்த மாட்டோம். 6 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளை தடுப்போம்.
வர்த்தகம், சரக்கு, ஜல்லி கற்கள், மணல் லாரி உட்பட அனைத்து விதமான லாரி போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும். செக் போஸ்ட்களில் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.