தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மோடியை வழிநடத்தும் டிரம்ப் முதல்வர் சித்தராமையா கிண்டல்

 மோடியை வழிநடத்தும் டிரம்ப் முதல்வர் சித்தராமையா கிண்டல்

 மோடியை வழிநடத்தும் டிரம்ப் முதல்வர் சித்தராமையா கிண்டல்


ADDED : மார் 11, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவின் செயல் பிரதமர் போன்று பேசுகிறார். அவர் சொல்வதை, பொம்மை போன்று மோடி பின்பற்றுகிறார்' என, முதல்வர் சித்தராமையா விமர்சித்து உள்ளார்.

தனது 'எக்ஸ்' பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:

இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கை முடிவில், அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க, 30 நாள் சலுகை காலம் வழங்குவதாக அமெரிக்கா கூறியது, இந்தியாவை அவமதிப்பதாகும். நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை அனுமதிப்பது அல்லது தடுப்பதில் எந்த வெளிநாட்டு அரசும் தலையிட கூடாது.

தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது, நாட்டின் தலைநகரம் புதுடில்லி அல்ல; வாஷிங்டன் டிசி என்று தெரிகிறது. டொனால்டு டிரம்ப், இந்தியாவில் செயல் பிரதமர் போன்று பேசுகிறார். மோடி, அவரின் வழிமுறைகளை பின்பற்றும் பொம்மை போன்று செயல்படுகிறார்.

ஆப்பரேஷன் சிந்துார் போர், தன்னால் தான் நிறுத்தப்பட்டது என்று டிரம்ப் பெருமை பேசுகிறார். இது பற்றி மோடி எதுவும் சொல்லவில்லை.

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியபோது, இந்தியா இணங்கி உள்ளது. இப்போது ரஷ்ய எண்ணெய் வாங்குவதிலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இதை வைத்து பார்க்கும் போது, இந்தியாவின் சுயாட்சி கேள்விக்குறியாகிறது.

மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி என்ற வார்த்தையை அரசியல் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள், பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

அவர்கள், தங்கள் நிர்வாகத்தில் இறையாண்மையை பலவீனப்படுத்துகின்றனர்.

உலகில் போரும், அமைதியின்மையும் அதிகரித்து வரும் நேரத்தில், இந்தியா எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேச வேண்டும். பிரதமர் மோடி, நாட்டின் கவுரவத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க தவறிவிட்டார். நாட்டின் நலனுக்காக அவர் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us