/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துங்கபத்ரா அணை துார்வார கோரிக்கை
/
துங்கபத்ரா அணை துார்வார கோரிக்கை
ADDED : ஏப் 19, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பால்: துங்கபத்ரா அணையை துார்வார வேண்டும் என, விவசாயிகள் மாநில அரசிடம் கோரி உள்ளனர்.
கொப்பால் மாவட்டத்தில் அமைந்துள்ளது துங்கபத்ரா அணை. கல்யாண கர்நாடகாவின் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது.
இந்த அணையில் தேங்கும் மண்ணின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால், அணையின் தண்ணீரை சேமிக்கும் அளவு, 132 டி.எம்.சி.,ல் இருந்து, 105 டி.எம்.சி.,யாக குறைந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.
எனவே மண்ணையும், சகதியையும் அகற்றி, அணையை துார்வார வேண்டும் என கல்யாண கர்நாடகா விவசாயிகள் மாநில அரசிடம் கோரி உள்ளனர். இது பற்றி பல முறை கூறியும் அரசு கேட்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

