/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'இன் - ஸ்பேஸ்' நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தம் கையெழுத்து
/
'இன் - ஸ்பேஸ்' நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தம் கையெழுத்து
'இன் - ஸ்பேஸ்' நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தம் கையெழுத்து
'இன் - ஸ்பேஸ்' நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : மே 09, 2025 12:47 AM

பெங்களூரு: கர்நாடகாவில் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உற்பத்தி பூங்கா அமைக்க, 'இன் - ஸ்பேஸ்' எனும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துடன், கர்நாடக அரசு, நேற்று இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பெங்களூரில் விண்வெளி தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு மையம் அமைக்கவும், பொது - தனியார் கூட்டுடன் பிரத்யேக விண்வெளி உற்பத்தி பூங்காவை அமைக்கவும் அடித்தளமாக அமைகின்றன.
இந்த ஒப்பந்தம் மூலம் நாட்டின் முதல், 'வர்த்தக விண்வெளி ஹப்' அமைப்பதற்கான முதல் படியை கர்நாடகா எடுத்து வைத்துள்ளது.
புதுமை, அதிநவீன ஆராய்ச்சி, திறமை மேம்பாட்டை வளர்ப்பதில், 'விண்வெளி தொழில்நுட்பத்துக்கான சிறப்பு மையம்' செயல்படும். அதுபோன்று, அடுத்த தலைமுறை செயற்கைகோள் தயாரிப்பு, வாகன உற்பத்தி தயாரிப்பு, விண்வெளி துறையில் பெரிய, வளர்ந்து வரும் வீரர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்க, 'விண்வெளி உற்பத்தி பூங்கா' செயல்படும்.
மாநில தலைமை செயலர் ஷாலினி, இன் - ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா முன்னிலையில், தகவல் தொழில்நுட்ப துறை செயலர் ஏக்ரூப் கவுர், இன் - ஸ்பேஸ் இணை செயலர் லோச்சன் செஹ்ரா முன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
இன் - ஸ்பேஸ் நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது, விண்வெளி தொழில்நுட்ப கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
சர்வதேச அளவில் விண்வெளி நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவில் விண்வெளி பூங்கா, பிரத்யேக சோதனை வசதிகள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை முதல்வர் சித்தராமையா வரவேற்றுள்ளார்.

