தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மின்சார ஸ்கூட்டர் தருவதாக ரூ.35 கோடி மோசடி இருவர் கைது

 மின்சார ஸ்கூட்டர் தருவதாக ரூ.35 கோடி மோசடி இருவர் கைது

 மின்சார ஸ்கூட்டர் தருவதாக ரூ.35 கோடி மோசடி இருவர் கைது


ADDED : மார் 14, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மின்சார ஸ்கூட்டர் வாங்கி தருவதாக, 3,250 பேரின் ஆதார் கார்டுகளை வாங்கி, வங்கியில், 35 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு ஜாலஹள்ளியில், 'ஆப்கி இவி' என்ற பெயரில், மின்சார ஸ்கூட்டர், சைக்கிள் விற்பனை செய்யும் ஷோரூம் இயங்கி வந்தது. அதன் உரிமையாளர்கள் ரவி, ஹனுமந்தராஜ். இவர்கள் இருவரும் மத்திய அரசின் மானியம் மூலம், குறைந்த விலைக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்கி தருவதாக, 3,250 பேரின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை வாங்கினர்.

இதனை வங்கியில் கொடுத்து, 35 கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் இருந்தனர். ஆதார், பான் கார்டுகளில் இருந்த முகவரிகளுக்கு கடனை திரும்ப செலுத்த வங்கி நோட்டீஸ் அனுப்பியதால் மோசடி நடந்தது தெரியந்தது.

இதனால், ஏமாற்றம் அடைந்தவர்கள், கடந்த 3ம் தேதி ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் போராட்டம் நடத்தினர். தலைமறைவான ரவி, ஹனுமந்தராஜை கைது செய்யும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில், பாகல்கோட்டில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us