sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆட்டோ தவணை பணம் செலுத்துவதற்காக இளம் பெண்ணை கொன்ற இருவர் கைது

/

ஆட்டோ தவணை பணம் செலுத்துவதற்காக இளம் பெண்ணை கொன்ற இருவர் கைது

ஆட்டோ தவணை பணம் செலுத்துவதற்காக இளம் பெண்ணை கொன்ற இருவர் கைது

ஆட்டோ தவணை பணம் செலுத்துவதற்காக இளம் பெண்ணை கொன்ற இருவர் கைது


ADDED : ஆக 25, 2025 04:19 AM

Google News

ADDED : ஆக 25, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர்: ஆட்டோவுக்கான மாத தவணைப்பணம் செலுத்துவதற்காக தங்கை போன்று பழகிய இளம் பெண்ணின் தங்க செயினை அபகரிக்கும் நோக்கில் அவரை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரை தேடி வருகின்றனர்.

ஆந்திராவின் ஹிந்துபுராவை சேர்ந்தவர் அர்ச்சனா, 27. இவர் ஓய்வு நேரத்தில் திருமண வீடுகளில் வரவேற்பாளினியாக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ஆகஸ்ட் 14ம் தேதி, தன் நண்பர்களுடன், சிக்கபல்லாபூரின் ஈஷா பவுன்டேஷனுக்கு சென்று வருவதாக, குடும்பத்தினரிடம் கூறி சென்றவர். மீண்டும் வீடு திரும்பவில்லை.

கொலை கலக்கமடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடினர். எந்த தகவலும் தெரியாததால், சிக்கபல்லாபூர் போலீசாரிடம் புகார் செய்தனர். போலீசார் தேட துவங்கினர். ஆகஸ்ட் 17ம் தேதியன்று, கவுரி பிதனுாரின், நாமகொண்ட்லு கிராமம் அருகில், அர்ச்சனாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலையாளிகளை கண்டுபிடிக்க, பல கோணங்களில் விசாரணை நடத்தி ராகேஷ், 28, இவரது தோழி அஞ்சலி, 23, யை கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்த போது, கொலை ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது.

பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றும் ராகேஷ், சிக்கபல்லாபூர், கவுரிபிதனுாரின் விருபசந்திரா கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவதற்கு முன், ஆந்திராவின் ஹிந்துபுராவில் திருமண வீடுகளில் சமையல்காரராக பணியாற்றினார்.

செயின் மீது கண் அப்போது அங்கு வரவேற்பாளினியாக பணியாற்றிய அர்ச்சனா அறிமுகமானார். இருவரும் அண்ணன், தங்கை போன்று அன்பாக பழகினர். சமீபத்தில் அர்ச்சனா, வீடியோ கால் செய்து, ராகேஷிடம் தன் கஷ்ட, சுகங்களை பற்றி பேசினார். அப்போது அர்ச்சனா அணிந்திருந்த தங்கத்தாலி செயின் மீது, ராகேஷின் பார்வை பதிந்தது.

இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று, ஆட்டோ வாங்கினார். மூன்று மாதமாக தவணை கட்டவில்லை. எந்த நேரத்திலும் ஆட்டோ ஜப்தி செய்யப்படலாம் என, அஞ்சினார். எனவே அர்ச்சனாவின் தாலிச்செயினை திருடி, பிரச்னையை சரி செய்ய திட்டமிட்டார்.

திட்டத்தை தன் தோழிகள் நிகாரிகா, அஞ்சலியிடம் கூறி உதவி கேட்டார். அஞ்சலி தன் மற்றொரு நண்பர் நவீனிடம் கூறி, ராகேஷுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். அனைவரும் சேர்ந்து திட்டம் தீட்டினர். இதன்படி ராகேஷ், அர்ச்சனாவுக்கு போன் செய்து, ஈஷா பவுன்டேஷனுக்கு செல்லலாம் என, அழைத்தார். அவரும் சம்மதித்தார். அதன்பின் நால்வரும், காரில் ஹிந்துபுராவுக்கு சென்று அர்ச்சனாவை அழைத்து கொண்டு, ஊரை சுற்றினர்.

காரிலேயே துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அவர் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிக்கொண்டு, உடலை நாமகொன்ட்லு அருகில் வீசிவிட்டு தப்பியது, விசாரணையில் தெரிந்தது.

ராகேஷ், அஞ்சலி கைதாகினர். நவீன், நிகாரிகா தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us