/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொலை: இருவர் கைது
/
ரயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொலை: இருவர் கைது
ரயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொலை: இருவர் கைது
ரயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொலை: இருவர் கைது
ADDED : பிப் 14, 2025 05:12 AM
பெங்களூரு: ரயிலில் கழிப்பறை அருகில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து நபரை வெளியே தள்ளி கொன்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
யஷ்வந்த்பூர் - பீதர் விரைவு ரயில் இம்மாதம் 11ம் தேதி, சென்று கொண்டிருந்தது. பொது பெட்டியில் பயணியர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், சிலர் கழிப்பறை அருகில் அமர்ந்திருந்தனர். அப்போது சென்னராயபட்டணாவை சேர்ந்த குமார், 28, கழிப்பறை அருகில் அமர வந்தார்.
அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த கலபுரகியின் சேடத்தை சேர்ந்த தேவப்பா, 45, பீரப்பா, 31, ஆகியோர் இடம் கொடுக்க மறுத்தனர். இதனால் மூவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.அங்கிருந்த மற்றபயணியர் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும், ஒரு கட்டத்தில் கோபமடைந்த தேவப்பா, பீரப்பா சேர்ந்து குமாரை தாக்கி, ஓடும் ரயிலில் இருந்து வெளியேதள்ளினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணியர், ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் ரயில் சென்ற வழித்தடத்தின் தேடிய போது, எலஹங்கா - கவுரிபிதனுார் வழித்திடத்தில் மறுநாள் காலை குமாரின்சடலத்தை கண்டுபிடித்தனர்.
தொட்டபல்லாபூரில் பதுங்கியிருந்த இருவரையும் கைதுசெய்தனர்.

