/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.500 தகராறில் நண்பரை கொலை செய்த இருவர் கைது
/
ரூ.500 தகராறில் நண்பரை கொலை செய்த இருவர் கைது
ADDED : ஆக 12, 2025 05:53 AM
பெலகாவி : வெறும் 500 ரூபாய்க்காக, தாயின் கண்ணெதிரே மகனை கொலை செய்த நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டார்.
பெலகாவி நகரின் யள்ளூர் கிராமத்தில் வசித்தவர் ஹுசேன் தாஷேவாலே, 45. இதே கிராமத்தில் வசிப்பவர்கள் மிதுன், 40, வினோத், 45. மூவரும் நண்பர்கள்.
சில ஆண்டுகளாக, மூவரும் சேர்ந்து பழைய இரும்புப் பொருட்களை வாங்கி, விற்கும் வியாபாரம் செய்கின்றனர். பொருட்களை விற்றதில், மிதுன், வினோத்துக்கு ஹுசேன் தாஷேவாலே 500 ரூபாய் கொடுக்க வேண்டியிருந் தது.
அதைத் தராமல் இழுத்தடித்தார். இதனால் நண்பர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும், ஹுசே் தாஷேவாலேவின் வீட்டுக்குச் சென்றனர் . 500 ரூபாயை கொடுக்கும்படி கேட்டனர்.
அப்போது மூவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து ஹுசேனை கண் மூடித்தனமாக தாக்கினர்.
வயிற்றில் ஓங்கி பல முறை குத்தினர். அங்கிருந்த அவரது தாய், மகனை காப்பாற்ற முயற்சித்தும், அவரை தள்ளிவிட்டு, ஹுசேனை தாக்கினர். பலத்த காயமடைந்த அவர், மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம்உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.