UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 10:36 PM
ராம்நகர்: பெங்களூரு தெற்கு மாவட்டமான ராம்நகரின் குதுார் கிராமத்தில் வசிப்பவர்கள் லோகேஷ், 28, மற்றும் குரு பிரசாத், 27, நண்பர்கள். இதே பகுதியில் மனநலம் சரியில்லாத 14 வயது சிறுமியை, 2020ல், இருவரும் கடத்தி சென்றனர்.
சிறுமியை லோகேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார். இதை குரு பிரசாத் மொபைல் போனில் வீடி யோ எடுத்தார். இது குறித்து, சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி குதுார் போலீசார், லோகேஷையும், குரு பிரசாத்தையும் கைது செய்தனர்.
விசாரணையை முடித்து பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில், இவர்களின் குற்றம் உறுதியானதால், லோகேஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; குரு பிரசாத்துக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பஞ்சாக்ஷரி நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.
