ADDED : மே 07, 2026 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹொஸ்கோட்: பெங்களூரு ரூரல் மாவட்ட எஸ்.பி., சந்திரகாந்த் கூறியதாவது:
ஹொஸ்கோட், கோலார், மாலுார், கே.ஆர்., புரம், காடுகோடி ஆகிய பகுதிகளில் அடிக்கடி பைக் திருட்டுகள் நடந்தன. இது குறித்து, விசாரிக்க ஹொஸ்கோட் போலீசார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
விசாரணையில், பைக் திருட்டில் ஈடுபட்ட ஹொஸ்கோட்டை சேர்ந்த நரசிம்மமூர்த்தி, 32, பிரசாத், 30, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள், புதிதாக இருக்கும் பைக்குகளை திருடி, ஆந்திராவிற்கு கொண்டு சென்று, அங்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள பைக்குகளை வெறும் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

