/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விநாயகர் ஊர்வலத்தில் கல்லெறிந்த இருவர் கைது
/
விநாயகர் ஊர்வலத்தில் கல்லெறிந்த இருவர் கைது
ADDED : செப் 07, 2025 02:26 AM
ராய்ச்சூர்: விநாயகர் ஊர்வலத்தின் மீது, கற்களை வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராய்ச்சூர் நகரின், கங்கா நிவாஸ் சாலையில், நேற்று முன் தினம் விநாயகர் சிலை அமர்த்தி, பண்டிகை கொண்டாடினர்.
நேற்று காலை பூஜை முடிந்து, விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இளைஞர்கள் நடனமாடியபடி ஊர்வலத்தில் சென்றனர்.
அப்போது கடை மீது ஏறிய இரண்டு நபர்கள், விநாயகர் ஊர்வலத்தின் மீது கற்களை வீசினர். இதில் வினய், கணேஷ் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடையின் மீதிருந்து கற்களை எறிவதை கண்ட சிலர், தங்களின் மொபைல் போனில் பதிவு செய்தனர். அதன்பின் அந்த இருவரையும் பிடித்து, சதர் பஜார் போலீஸ் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், கல்லெறிந்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரசாந்த், பிரவீண் என்பது தெரிந்தது. முன்பகை காரணமாக இதை செய்துள்ளனர்.
இவர்களுக்கும், ஊர்வலத்தில் காயமடைந்த வினய், கணேஷ் இடையே, மனஸ்தாபம் இருந்தது.
தங்களின் தெரு வழியாக ஊர்வலம் நடத்த கூடாது என, பிரசாந்த், பிரவீண் சண்டை போட்டனர்.
இதை பொருட்படுத்தாமல், அந்த தெரு வழியாக ஊர்வலம் நடந்ததால், கோபத்தில் கல்லெறிந்து வினய். கணேஷை காயப்படுத்தியதை ஒப்புக் கொண்டனர்.