தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போலி ஆவணங்கள் மூலம் ரூ.2,384 கோடிக்கு  உள்ளீட்டு வரி வரவு பெற முயன்ற இருவர் கைது

 போலி ஆவணங்கள் மூலம் ரூ.2,384 கோடிக்கு  உள்ளீட்டு வரி வரவு பெற முயன்ற இருவர் கைது

 போலி ஆவணங்கள் மூலம் ரூ.2,384 கோடிக்கு  உள்ளீட்டு வரி வரவு பெற முயன்ற இருவர் கைது


ADDED : மே 13, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: போலி ஆவணங்கள் மூலம் பல நிறுவனங்களை துவக்கி 2,384 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரி வரவு பெற முயன்ற, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுவாக வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பொருளை ஜி.எஸ்.டி., வரி செலுத்தி வாங்குவர். அந்த பொருளுக்கு ஜி.எஸ்.டி., வரி வசூலித்து அதில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட தவணையை அரசு செலுத்துவதற்காக ஐ.டி.சி., எனும் உள்ளீட்டு வரி வரவு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு கும்பல் எந்த ஒரு பொருளையும் வாங்காமல் அந்த பொருளை விற்றதாக கூறி, வணிக வரி துறையிடம் இருந்து 2,384 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரி வரவு பெற முயற்சி செய்வது பற்றி, வணிக வரி துறையின் அமலாக்க பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்படி விசாரணை நடத்தி பெங்களூரின் சலிமுல்லா பெய்க், ஹசன் பெய்க் ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் 127 நிறுவனங்கள் நடத்துவதாக, போலியாக ஆவணங்கள் தயார் செய்து, ஐ.டி.சி., முறைப்படி வணிக வரி துறையிடம் இருந்து 2,384 கோடி ரூபாய்க்கு வரி வரவு பெற முயன்றது தெரிய வந்து உள்ளது.

கடந்த ஆண்டும் இதுபோன்று 1,464 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரி வரவு பெற முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us