தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எவரெஸ்ட் உச்சியை அடைந்து பெங்களூரின் இருவர் சாதனை

 எவரெஸ்ட் உச்சியை அடைந்து பெங்களூரின் இருவர் சாதனை

 எவரெஸ்ட் உச்சியை அடைந்து பெங்களூரின் இருவர் சாதனை


ADDED : மே 25, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 10:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரை சேர்ந்த பெண் டாக்டர் உட்பட இருவர், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, சாதனை செய்துள்ளனர்.

கர்நாடக மலையேற்ற சங்கத்தின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எவரெஸ்ட் சிகரம் ஏற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் தேவராஜப்பா, 40, பிரபல கண் சிகிச்சை வல்லுநர் சின்மயி த்ரிசூலமூர்த்தி, 45, பங்கேற்றனர்.

எவரெஸ்ட் சிகர உச்சியை நோக்கி புறப்பட்ட இவர்களின் சாகச பயணத்தை, மார்ச் 9ம் தேதியன்று, பெங்களூரின் விதான்சவுதா முன் முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.

உடலை சில்லிட வைத்த பனிப்பொழிவு, கடுங்குளிர் போன்ற, பல சவால்களை கடந்து, ஏப்ரல் 22ம் தேதியன்று, லோபூசே ஈஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.

அதன்பின் அங்கிருந்து பல கடினமான பாதைகளை எதிர்கொண்டு, 56 நாட்களுக்கு பின், மே 21ம் தேதியன்று மதியம் 12:10 மணிக்கு, இருவரும் சேர்ந்து 29,031 உயரமான எவரெஸ்ட் சிகர உச்சியை அடைந்தனர். அங்கு, தேசிய கொடியை நாட்டினர்.

இதன் மூலம் கர்நாடகாவின் பெருமையை உயர்த்தினர். இவர்களின் சாதனைக்கு, மாநிலம் முழுதும் பாராட்டு குவிந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us