வேகமாக வந்த அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற இருவர் பரிதாப பலி
வேகமாக வந்த அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற இருவர் பரிதாப பலி
ADDED : ஜூலை 12, 2026 11:49 PM
பீதர்: ஹும்னாபாத் தாலுகாவில், பைக் மீது வேகமாக வந்த அரசு பஸ் மோதியதில், சித்தியும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுகாவின் துபலகுந்தி தாலுகாவில் வசித்தவர் பவன், 23. இவரது சித்தி நரசம்மா சாயபண்ணா, 32. இந்த பெண், மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டார்.
இவருக்கு நாட்டு மருந்து வாங்கித்தரும் நோக்கில், நேற்று காலை மன்னாஏகல்லி கிராமத்துக்கு, பவன் பைக்கில் அழைத்து சென்றார். கிராமத்துக்கு சென்று சித்தியை, நாட்டு மருந்து சாப்பிட வைத்த பின், சித்தியுடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
கபிராபாத் வாடி கிராஸ் அருகில், தேசிய நெடுஞ்சாலை - 5 0ல் செல்லும் போது, வேகமாக வந்த அரசு பஸ், இவரின் பைக் மீது வேகமாக மோதியது. பைக்கில் இருந்து விழுந்த பவனும், நரசம்மாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து, ஹும்னாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.
