sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 'குட்கா' வியாபாரியை மிரட்டி பணம் பறித்த போலி ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இருவர் கைது

/

 'குட்கா' வியாபாரியை மிரட்டி பணம் பறித்த போலி ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இருவர் கைது

 'குட்கா' வியாபாரியை மிரட்டி பணம் பறித்த போலி ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இருவர் கைது

 'குட்கா' வியாபாரியை மிரட்டி பணம் பறித்த போலி ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இருவர் கைது


ADDED : பிப் 26, 2026 06:33 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனசங்கரி: 'குட்கா' வியாபாரியை மிரட்டி 5 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், போலி ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு, பீன்யாவில் வசிப்பவர் ராஜேந்திர சிங்; குட்கா வியாபாரி. கடந்த மாதம் 10ம் தேதி இவரது வீட்டிற்கு இருவர் சென்றனர். தங்களை ஜி.எஸ்.டி., எனும் சரக்கு சேவை வரி துறை அதிகாரிகள் என்று கூறினர். அடையாள அட்டையையும் காண்பித்தனர்.

'நீங்கள் வரி செலுத்தாமல் மோசடி செய்கிறீர்கள். உங்களை கைது செய்ய வந்து உள்ளோம். கைது செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும்' என்று மிரட்டினர்.

கைதுக்கு பயந்த வியாபாரி, 5 லட்சம் ரூபாய் கொடுத்தார். இதுகுறித்து யாரிடம் கூறவில்லை. இந்நிலையில் பனசங்கரியில் உள்ள ஜி.எஸ்.டி., அலுவலக அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி, வியாபாரிகளிடம் சிலர் பணம் வசூலிப்பதாக, பனசங்கரி போலீஸ் நிலையத்தில் இம்மாதம் 17ம் தேதி புகார் பதிவானது.

புகாரின்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில், பனசங்கரி ஜி.எஸ்.டி., அலுவலத்தில் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்த நாகராஜ், 35, தாதாபீர், 38 ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டது.

குட்கா வியாபாரியை மிரட்டி பணம் பறித்ததை ஒப்பு கொண்டனர்.

நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கம், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us