/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருடிய தங்க நகைகளை விற்று உல்லாச பயணத்திற்கு செலவழித்த இருவர்
/
திருடிய தங்க நகைகளை விற்று உல்லாச பயணத்திற்கு செலவழித்த இருவர்
திருடிய தங்க நகைகளை விற்று உல்லாச பயணத்திற்கு செலவழித்த இருவர்
திருடிய தங்க நகைகளை விற்று உல்லாச பயணத்திற்கு செலவழித்த இருவர்
ADDED : அக் 18, 2025 04:55 AM

பெங்களூரு: திருடிய தங்க நகைகளை விற்று உல்லாச பயணத்திற்கு செலவழித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். 80 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
பெங்களூரு, கே.எஸ்., லே - அவுட்டில் உள்ள கிரிநகரை சேர்ந்த உஷா, வரலட்சுமி ஆகிய இருவரிடமும், கடந்த 13ம் தேதி, மர்ம நபர்கள் இருவர் கத்தியை காண்பித்து மிரட்டி தங்க செயினை பறித்துச் சென்றனர். அப்போது, செயினை தர மறுத்த வரலட்சுமிக்கு கத்தியில் வெட்டு விழுந்தது.
இது குறித்து கிரிநகர் போலீசார் விசாரித்தனர். அதே நாளில் குமாரசாமி லே - அவுட் பகுதியிலும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று பெங்களூரு தெற்கு பிரிவு டி.சி.பி., லோகேஷ் பி.ஜகலசர் கூறியதாவது:
தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்பட்டன. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. செயின் பறிப்பில் ஈடுபட்டது, பெங்களூரு கொல்லரஹள்ளி பகுதியை சேர்ந்த யோகானந்தா, 35, என்பது தெரிய வந்தது.
இவர் மீது கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன; பல முறை சிறை சென்றுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு, சிறையிலிருந்து ஜாமினிலிருந்து வெளியே வந்தார். மீண்டும் தனது கூட்டாளி பிரவீனுடன், 28, இணைந்து செயின் பறிப்பில் ஈடுபட்டார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 13ம் தேதி, பெங்களூரை விட்டு இருவரும் வெளியேறினர். தங்க நகைகளை விற்று பணமாக்கி, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட பல இடங்களுக்கு உல்லாச பயணம் சென்றனர்.
சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பெங்களூரு வந்தனர். இதை அறிந்த போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.