/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜெலட்டின் வழக்கு மேலும் இருவர் கைது
/
ஜெலட்டின் வழக்கு மேலும் இருவர் கைது
ADDED : ஆக 10, 2025 02:48 AM
கலாசிபாளையா: பெங்களூரு, கலாசிபாளையா பி.எம்.டி.சி., பஸ் முனையத்தில் உள்ள கழிப்பறை முன், 23ம் தேதி சாக்கு பையில் இருந்து 22 ஜெலட்டின் குச்சிகள், 30 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டன.
நாசவேலையில் ஈடுபட யாராவது கடத்தி வந்தனரா என்ற கோணத்தில், கலாசிபாளையா போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கோலார் மாவட்டம் பங்கார்பேட்டை ஹஞ்சலா கிராமத்தின் கணேஷ், 38, முனிராஜ், 32, கோலார் தாலுகா பெஞ்சனஹள்ளியின் சிவகுமார், 32 ஆகியோர், கடந்த மாதம் 29ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகாலில் உள்ள கல்குவாரியில் பாறைகளை தகர்க்க ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை கொண்டு சென்றதும், போலீசாருக்கு பயந்து கழிப்பறை முன் விட்டுச் சென்றதும் தெரிந்தது.
இந்த வழக்கில் கோலாரை சேர்ந்த நவீன், சிவா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது, விசாரணையில் தெரிய வந்தது. நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.

