/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.5.50 கோடி போதை பறிமுதல் நைஜீரியாவின் இருவர் கைது
/
ரூ.5.50 கோடி போதை பறிமுதல் நைஜீரியாவின் இருவர் கைது
ரூ.5.50 கோடி போதை பறிமுதல் நைஜீரியாவின் இருவர் கைது
ரூ.5.50 கோடி போதை பறிமுதல் நைஜீரியாவின் இருவர் கைது
ADDED : அக் 23, 2025 11:08 PM

பெங்களூரு: பெங்களூரின் இரண்டு இடங்களில், சி.சி.பி., போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் 5.50 கோடி ரூபாய் மதிப்பிலான, போதைப் பொருள் சிக்கியது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
ஹெப்பகோடி பகுதியில் எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக, சி.சி.பி., போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, கல்லுாரியின் பின்பக்கம் ஸ்கூட்டரில் எம்.டி.எம்.ஏ., விற்பனை செய்த, நைஜீரியாவின் துரோ மைக்கேல், இபு சாமுவேல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 47 கிராம் எம்.டி.எம்.ஏ., பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2.50 கோடி ரூபாய்.
கைதான இருவரும் வணிக விசாவில் இந்தியா வந்துள்ளனர். விசா காலம் முடிந்தும், சொந்த நாட்டிற்கு திரும்பாமல் சட்டவிரோதமாக இங்கு வசித்துள்ளனர். முதலில் தமிழகத்தின் திருப்பூரில் தங்கியிருந்து அங்கிருந்து துணிகளை வாங்கி, நைஜீரியாவிற்கு அனுப்பி, துணி வியாபாரம் செய்தனர்.
எளிதில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில், டில்லியில் உள்ள போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளனர். டில்லியில் இருந்து போதைப் பொருள் வாங்கி வந்து, இங்கு கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இருவர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.
இதுபோல கெம்பேகவுடா நகரில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வந்த பார்சலில், போதைப் பொருள் இருப்பதாக கிடைத்த தகவலில், சி.சி.பி., போதை தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
ஒரு பார்சலில் இருந்து 3 கிலோ எடையுள்ள ஹைட்ரோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. அதன் மதிப்பு, 3 கோடி ரூபாய். கஞ்சாவை ஆர்டர் செய்தவர்கள், அனுப்பியவர்கள் யார் என்று விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை சீமந்த்குமார் சிங் பார்வையிட்டார்.

