ADDED : ஏப் 27, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் மாவட்டம், எளந்துார் தாலுகாவின், கும்பள்ளி கிராமத்தில் வசித்தவர் அபய் கவுடா, 13. கிருஷ்ணாபுரா கிராமத்தில் வசித்தவர் விருஷபேந்திரா, 14. இருவரும் நண்பர்கள்.
பள்ளி விடுமுறை என்பதால், இருவரும் நேற்று மதியம், ஏரிக்கு சென்றனர். ஆழமான இடத்துக்கு நீந்திச் சென்றதால், நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தீயணைப்பு படையினர், இருவரின் உடல்களை மீட்டனர்.
எளந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.