/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்ப்பிணி படுகொலை வழக்கு இரு போலீசார் சஸ்பெண்ட்
/
கர்ப்பிணி படுகொலை வழக்கு இரு போலீசார் சஸ்பெண்ட்
ADDED : டிச 26, 2025 06:49 AM
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் கர்ப்பிணி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பணியில் அலட்சியம் காட்டியதாக இரு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
ஹூப்பள்ளி அருகே இனாம் வீராபுரா கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தா, 22. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரும், உயர் சமூகத்தை சேர்ந்த மான்யா, 20 என்பவரும் காதலித்து, கடந்த ஜூன் மாதம், 19ம் தேதி பதிவு திருமணம் செய்தனர்; ஹாவேரியில் வசித்தனர். மான்யா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இம்மாதம், 8ம் தேதி சொந்த ஊருக்கு வந்தனர்.
கடந்த, 22ம் தேதி விவேகானந்தாவின் வீட்டிற்குள் புகுந்த மான்யாவின் தந்தை பிரகாஷ் பாட்டீல் உள்ளிட்டோர், மான்யாவை உருட்டு கட்டை மற்றும் கடப்பாரையால் தாக்கி படுகொலை செய்தனர். அதேநேரத்தில், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு புகார் கொடுக்க சென்ற போது, புகாரை வாங்காமல் அலட்சியம் காட்டியதாக, ஹூப்பள்ளி ரூரல் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் சந்திரகாந்த் ரத்தோட், சங்கமேஷ் மீது, மான்யாவின் கணவர் விவேகானந்தா புகார் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்தது தெரியவந்ததால், பணியில் அலட்சியம் காட்டிய இரண்டு போலீஸ்காரர்களையும் சஸ்பெண்ட் செய்து, தார்வாட் எஸ்.பி., குஞ்சன் ஆர்யா உத்தரவிட்டு உள்ளார்.

