தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மத்திய அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த இருவருக்கு தலா 5 ஆண்டு சிறை

 மத்திய அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த இருவருக்கு தலா 5 ஆண்டு சிறை

 மத்திய அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த இருவருக்கு தலா 5 ஆண்டு சிறை


ADDED : மே 19, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை மிரட்டி, 100 கோடி ரூபாய் கேட்ட வழக்கில், ஜெயேஷ் பூஜாரி, ஆசிப் பாஷா ஆகிய இருவருக்கும், தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாக்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகத்துக்கு, 2023 மார்ச் 21ம் தேதி மூன்று முறை தொடர்பு கொண்ட நபர், '100 கோடி ரூபாய் கொடுக்கா விட்டால், அலுவலகத்தை வெடி வைத்து தகர்த்து விடுவேன்' என மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக, நாக்பூர் போலீசாருக்கு, அமைச்சர் அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக கட்கரி இல்லம், அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பெலகாவிக்கு வந்த நாக்பூர் போலீசார், பல்வேறு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஜெயேஷ் பூஜாரி, அப்சர் பாஷாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து ஒரு மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்துடன் ஜெயேஷ் பூஜாரியின் டைரியை பரிசோதித்த போது, கட்கரியின் அலுவலக எண் அதில் இருந்தது. 'இந்த எண்ணை நண்பர் கொடுத்தார்' என ஜெயேஷ் தெரிவித்து இருந்தார்.

மேலும், விசாரணை நடத்திய நாக்பூர் போலீசார், இந்த வழக்கு தொடர்பாக, நாக்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் ஜெயேஷ் பூஜாரி, ஆசிப் பாஷாவுக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us