தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மரத்தில் பைக் மோதி இரு வாலிபர்கள் பலி

 மரத்தில் பைக் மோதி இரு வாலிபர்கள் பலி

 மரத்தில் பைக் மோதி இரு வாலிபர்கள் பலி


ADDED : பிப் 26, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எலஹங்கா: மரத்தில் பைக் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். நண்பர் படுகாயம் அடைந்தார்.

பெங்களூரு எலஹங்காவை சேர்ந்தவர்கள் கிரண், 25, யஷ்வந்த், 25, கவுதம், 24. நண்பர்களான மூன்று பேரும் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு புல்லட் பைக்கில் ஜாலிரைடு சென்றனர். மூன்று பேரும் ஹெல்மெட் அணியவில்லை.

அதிகாலை நேரம் சாலையில் வாகனங்கள் இல்லை என்பதால், பைக்கை வேகமாக கவுதம் ஓட்டினார்.

உன்னிகிருஷ்ணன் சந்திப்பு பகுதியில், திருப்பத்தில் திரும்பும் போது கவுதம் கட்டுப்பாட்டை இழந்த பைக் தறிகெட்டு ஓடி, சாலையோர மரத்தில் மோதியது.

பைக்கில் இருந்து மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த கிரண் சம்பவ இடத்திலேயேயும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யஷ்வந்த்தும் இறந்தனர். படுகாயம் அடைந்த கவுதமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எலஹங்கா போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us