/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் - ஸ்கூட்டர் மோதி இரு வாலிபர்கள் பலி
/
பைக் - ஸ்கூட்டர் மோதி இரு வாலிபர்கள் பலி
ADDED : ஜூன் 04, 2025 12:52 AM

சிட்டி மார்க்கெட் : சிட்டி மார்க்கெட் மேம்பாலத்தில், பைக்கும், ஸ்கூட்டரும் மோதிய விபத்தில், இரண்டு வாலிபர்கள் இறந்தனர்.
பெங்களூரு நகரில் எப்போதும் பரபரப்பாக இருக்கும், சிட்டி மார்க்கெட் பகுதியில் பி.ஜி.எஸ்., எனும் பாலகங்காதர சுவாமி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் சிட்டி மார்க்கெட்டில் இருந்து, சிர்சி சதுக்கம் வரை 2.65 கி.மீ., துாரம் உள்ளது.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு மேம்பாலத்தில் மின்சார ஸ்கூட்டரில் இருவர் சென்றனர். பின்னால் வேகமாக வந்த ஒரு பைக், மின்சார ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டர், பைக்கில் சென்ற நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினர்.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சிட்டி மார்க்கெட் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவர் இறந்து விட்டனர். இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவர்கள் கே.பி.அக்ரஹாராவை சேர்ந்த ஆகாஷ், 25, விஜயநகரின் அப்சல், 25, என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் காசிம், மணி என்றும் தெரிந்தது.
ஆகாஷ், தன் நண்பர் மணியுடன் இரவு உணவு சாப்பிட, கே.பி.அக்ரஹாராவில் இருந்து சிட்டி மார்க்கெட் பகுதிக்கு பைக்கில் சென்றது தெரிந்து உள்ளது.
மங்களூரை சேர்ந்த அப்சல், பெங்களூரு விஜயநகரில் தங்கி இருந்து, துணிக்கடையில் வேலை செய்ததும் தெரிந்தது.