கலப்படம் இல்லாத தானியங்கள் விவசாய சந்தை இன்று ஆரம்பம்
கலப்படம் இல்லாத தானியங்கள் விவசாய சந்தை இன்று ஆரம்பம்
ADDED : ஏப் 11, 2025 11:08 PM
பெங்களூரு: பொது மக்களுக்கு கலப்படம் இல்லாத உணவு தானியங்கள், காய்கறிகள் கிடைக்கும் நோக்கில், பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகரில் இன்று முதல் 12ம் தேதி வரை விவசாய சந்தை நடக்கவுள்ளது.
கர்நாடக விவசாய சங்கம் மற்றும் பசுமை சேவை வெளியிட்ட அறிக்கை:
கடைகளில் விற்கப்படும் அரிசி, உணவு தானியங்கள், காய்கறிகள் தரமாக இருப்பதில்லை; ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; விலையும் அதிகம். இதை மனதில் கொண்டு, விவசாய சங்கம் சார்பில் 'விவசாய சந்தை' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் ஐடியல் ஹோம்ஸ் லே - அவுட்டில் உள்ள, முனி வெங்கடய்யா நினைவு திறந்தவெளி நாடக மன்றத்தில், இன்று முதல் 14ம் தேதி வரை விவசாய சந்தை நடக்கும்.
இங்கு விவசாயிகளிடம் பொருட்களை நேரடியாக வாங்கலாம். தரமான அரிசி, பருப்பு, கேழ்வரகு, கொட்டைகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள், தேன், சமையல் எண்ணெய் உட்பட, பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மிகவும் குறைந்த விலையில் தேவையானவற்றை வாங்கலாம். இந்த விவசாய சந்தை வெற்றி பெற்றால், பெங்களூரின் மற்ற பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்படும். தற்போது நடக்கும் விவசாய சந்தையில், தொட்டபல்லாபூர், கோலார், சாம்ராஜ்நகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்பர்.
இடைத்தரகர்களின் தொல்லை இல்லாமல், விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்கலாம். மக்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
