வேலையில்லாத டாக்டர்கள் எம்.பி., மஞ்சுநாத் எச்சரிக்கை
வேலையில்லாத டாக்டர்கள் எம்.பி., மஞ்சுநாத் எச்சரிக்கை
ADDED : ஆக 16, 2026 11:09 PM
பெங்களூரு: ''நாட்டில் லட்சக்கணக்கான டாக்டர்கள் உருவாகியும், சரியானபடி நியமிக்கப்படாததால், டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த நான்கு ஆண்டுகளில் டாக்டர்களும் வேலை இல்லாதவர்கள் ஆகிவிடுவர்,'' என, டாக்டரும், பா.ஜ., - எம்.பி.,யும் மஞ்சுநாத் தெரிவித்தார்.
பெங்களூரின் தனியார் ஹோட்டலில், மருத்துவம் தொடர்பாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், மஞ்சுநாத் எம்.பி., பேசியதாவது:
நாட்டின், 825 மருத்துவ கல்லுாரிகளில் இருந்து ஆண்டு தோறும் 1.20 லட்சம் டாக்டர்கள், 90,000 முதுகலை பட்டப்படிப்பு முடித்த டாக்டர்கள், படிப்பு முடிந்து வெளியே வருகின்றனர். மருந்துகள் உற்பத்தியில் இந்தியா உலகின் தலைநகராக வளர்கிறது. தரமான மருந்து, மாத்திரைகள் தயாராக்கப்படுகின்றன.
எம்.ஆர்.ஐ., சிட்டி ஸ்கேன், வென்டிலேட்டர் உட்பட அனைத்து மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிலேயே உற்பத்தியாகின்றன. லட்சக்கணக்கான டாக்டர்கள் உருவாகியும், சரியான படி டாக்டர்கள் நியமிக்கப்படாததால் இரண்டாம் கட்ட நகரங்கள், கிராமப்புறங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.
மனித வளம் தேவையான வளம் வளர்ந்திருந்தும், டாக்டர்களை நியமிக்காவிட்டால் அடுத்த நான்கு ஆண்டுகளில,் டாக்டர்கள் வேலையில்லாதவர்கள் ஆகிவிடுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
