/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாக்., எல்லைக்குள் இந்திய ராணுவம் மத்திய அமைச்சர் ஜோஷி எச்சரிக்கை
/
பாக்., எல்லைக்குள் இந்திய ராணுவம் மத்திய அமைச்சர் ஜோஷி எச்சரிக்கை
பாக்., எல்லைக்குள் இந்திய ராணுவம் மத்திய அமைச்சர் ஜோஷி எச்சரிக்கை
பாக்., எல்லைக்குள் இந்திய ராணுவம் மத்திய அமைச்சர் ஜோஷி எச்சரிக்கை
ADDED : மே 13, 2025 01:08 AM

ஹூப்பள்ளி : ''இனி பாகிஸ்தான் இருமினால் போதும். இந்திய ராணுவம் அந்நாட்டு எல்லைக்குள் நுழையும் என, உலகத்துக்கே இந்தியா தகவல் தந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி;
உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவம் வைத்துள்ளது இந்தியா. ஐ.நா., சபையின் விதிகளை நிராகரித்து, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினோம். அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்றுவிட்டோம் என, கூறவில்லை. இந்தியாவை சீண்டிய பயங்கரவாதிகளில் சிலரை தவிர, மற்றவர்களை ஒழித்தோம்.
இந்தியா வளர்ந்து வருகிறது. இதை சிலரால் சகிக்க முடியவில்லை. எனவே இட ஒதுக்கீடு, அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இனி பாகிஸ்தான் இருமினால் போதும். இந்திய ராணுவம் பாக்., எல்லைக்குள் நுழையும் என, உலகத்துக்கே இந்தியா தகவல் தந்துள்ளது. தற்போதைக்கு போர் நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று, நான்கு நாட்கள் நடந்த தாக்குதலில், பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன. அமெரிக்கா மத்தியஸ்தம் குறித்து, ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளோம்.
நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். எங்கு, என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு, சிவசேனா தலைவர்கள் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.